Thursday, May 24, 2018

Vaippu sthala temples - Intro

சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
___________________________________
🌸 *பாடல் பெற்ற வைப்புத் தல தரிசனம்:*🌸
(தனிப்பாடல் இல்லாத வைப்புத் தலங்கள் தொடர்)
____________________________________
நாயன்மார்கள் பாடல் பெற்ற தலத்தை தரிசிக்கச் செல்லும்போது, பாடப்பெற்ற தலங்களில் இருந்தவாறே, அருகிலுள்ள தலங்களுக்குச் செல்லாமலேயே, இங்கிருந்து பாடிய தலங்களே, வைப்புத் தலங்களாகும்.

பாடல் தலங்களுக்குச் சென்று வழிபடுவதுபோல, வைப்புத் தலங்களுக்கும் சென்று, தரிசிப்பது பெரும் பலனுண்டு.

மேலும் அறியப்படாத தலங்களையும் அடியார்கள்  அணைவரும் தெரிந்து கொள்ளவும், நால்வர் பாடிய வைப்புத் தலங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நால்வர் பெருமக்கள் பாடும்போது, அருகில் இருக்கும் தலங்களையும் தரிசித்து விட்டுத்தான் தலயாத்திரை செய்துள்ளனர் என்கிறார் சேக்கிழார் பெருமான்.

நால்வர் போற்றிப் பரவிய வைப்புத் தலங்களை நாமும் தரிசிப்பதுதானே நன்று.

இதில் வரும் வைப்புத் தலங்களுக்கு, பாடல் பெற்ற தலங்களுக்கு இருப்பது போல, தனிப்பாடல் எதுவும் கிடையாது.

தொன்மையான இதர சிவ தலங்களை, பிற தலங்களில் வைத்துப் பாடியதால் இவையாவும் வைப்புத் தலங்களாகும்.

மேலும் ஒரே பாடலில் பல வைப்புத் தலங்களின் மீது பாடியுள்ளனர்.

திருஞானசம்பந்தரின் ஷேத்திரக் கோவை, திருநாவுக்கரசரின் கோவைத் திருத்தாண்டகம் மற்றும்,அடைவுத் திருத்தாண்டகம், சுந்தரரின்ஊர்த்தொகை மற்றும், திருநாட்டுத் தொகை, மாணிக்க வாசகரின் கீர்த்தித் திருஅகவல் ஆகியவையாவும் வைப்புத் தலங்கள் மீது பாடப் பட்டவையாகும்.

தீர்த்தத்தின் பெயர்களைக் கொண்டும், சுவாமி பெயரைக் கொண்டும், வைப்புத் தலங்களை கண்டறியப்பட்டது.

நாயன்மார்கள் பிறந்த முக்தி பெற்ற தலங்களை நாம் அவசியம் சென்று தரிசிக்க வேண்டும்.

மேலும், பாடல் பெற்ற தலங்களிலும், வைப்புத் தலங்களிலும் இடம்பெறாத நாயன்மார்களின் ஜனன முக்தித் தலங்கள் அமைந்து இருக்கின்றன.

சுயம்புத் திருமேனிகளாக விளங்கும் பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த, வைப்புத் தலங்களைத் தரிசிப்பதால், இறைவன் கடாஷத்தைப் பெற முயல்வோம்.

பாடல் பெற்ற தலங்களையெல்லாம் தரிசித்து விட்டேன் என்றிருந்தோர் அணைவரும், இனி வைப்புத் தலங்களுக்கும் சென்று தரிசிக்க வேண்டும்.

வைப்புத் தலங்களின் ஆலயத்தைப் பற்றி அவ்வளவாக விழிப்புணர்வு இல்லை., ஏன் அடியார்களிடம்கூட இத்தலங்கள் பற்றி நினைவுகள் இல்லை.

பாடல் பெற்ற தலங்களில் இருப்பவனும், வைப்புத் தலங்களில் இருப்பவனும் நம் ஈசனே!.

வைப்புத் தலங்களில் பெரும்பான்மையான ஆலயங்களில் பூஜை செய்வதற்குக்கூட வழியில்லாத நிலையில் இருந்து வருகிறது.

சில கோயிலில்களில் மாலை வேளைகளில் திறந்து விளக்கிடுவதாக தெரிய வருகிறது.

பாடல் பெற்ற தலங்களுக்குச் செல்லும் நாம், இனி இதனருகாக அமைந்து இருக்கும் வைப்புத் தலங்களுக்கும் செல்வோமாக.

வைப்புத் தலங்களுக்கு அணைவரும் தரிசிக்க சென்று வர முனைந்தால், நாளடைவில் அவ்வாலயத்தையும் மேன்மைக்கு கொண்டு வந்து விடலாம். அவனருளையும் பெற்று விடலாம்.

இனியும் வைப்புத் தலங்களின் விளக்கங்களை வெளிக் கொணரவில்லையென்றால், நாளடைவில் நம் சந்ததியர்களுக்கு, வைப்புத் தலங்களை காணக்கிடைக்கச் செய்யாத பாவியாகி விடுவோம் நாம்.

ஒரு சில வைப்புத் தலங்களில், பாலாயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றும் வருகின்றன, இது மனதிற்கு நிவாரணமான மருந்து.

இதற்கு முன் *தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்* பதிவு தந்ததுபோல, *தினமும் ஒரு வைப்புத் தல தரிசனம்* பதிவு தர உள்ளோம்.

          திருச்சிற்றம்பலம்.*

No comments:

Post a Comment